திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு .
கே.கே .நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை .

திருச்சி மத்திய சிறையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை போலீசரத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நேற்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மத்திய சிறையில் மயங்கி விழுந்தார்.
பிறகு அவரை ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்க்க டாக்டர் ராஜேஷ் இறந்து விட்டதாக . கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி விக்னேஷ் கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.