திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி .
பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 65) இவர் அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி முகமது காசிம் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது முகமதுகாசிம் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக் அதில் முட்டையை போட்டு அவித்துக் கொண்டிருந்தார்.பிறகு தண்ணீர் கொதித்தவுடன் அந்த பாத்திரத்தை தூக்கியபோது எதிர்பாராத விதமாக கைநழுவி அவரது மார்பிலும் இரு கைகளிலும் சூடான நீர் ஊற்றப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த முகமது காசிம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் .
பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.