Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சுவர் இடிந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ் வழங்கினார்

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31-வது வார்டு வரகனேரி குழுமிக்கரை பகுதியில் (4.5.25) அன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீட்டின் அருகே இருந்த அரசமரம் சாய்ந்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இப்பேரிடரில் சிக்கிய கொளஞ்சியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4.லட்சத்தை அவர்களது குடும்பத்தினரிடம் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

 

Suresh

இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன், வருவாய் அலுவலர் சந்திரசேகரன்,

கிரம நிர்வாக அலுவலர் ஜெய் கணேஷ்,வட்டச் செயலாளர் கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.