திருச்சி பொன்மலை பகுதி அம்மா பேரவை சார்பில் நீர்மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார்.
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்
பொன்மலை பகுதி கழகம், கணேசபுரம் மெயின் ரோட்டில் பொதுமக்களில் தாகம் தணிக்கும் நீர்மோர், தண்ணீர் பந்தலை
முன்னாள் அமைச்சர், அமைப்புச் செயலாளர் செ.செம்மலை மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை பொன்மலை பகுதி அம்மா பேரவை செயலாளர் செல்வம் செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் பொன்மலை பகுதி செயலாளர் M.பாலசுப்பிரமணியன். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சூரியூர் S.ராஜாமணிகண்டன் பகுதி அவை தலைவர் மகாலிங்கம் பகுதி துணைச் செயலாளர் ஜான் வின்சென்ட் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பேராசிரியர் பாபு பொன்மலைப்பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமார். பொன்மலை பகுதி சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் நிஜாமுதீன், பொன்மலை மகளிர் அணி பகுதி செயலாளர் துர்கா தேவி, வட்ட பிரதிநிதி மணிகண்டன் மற்றும் அதிமுகவினர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .