Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய இந்த மாதம் ஒரு நாள் மீண்டும் ஒர் வாய்ப்பு.திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

0

'- Advertisement -

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்ற, திருத்த மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்ட நிா்வாகம் இந்த மாதம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

 

Ad banner

இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை அன்று பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

 

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம்-2, திருச்சி மேற்கு வட்டத்தில் அண்ணாநகா், திருவெறும்பூா் வட்டத்தில் அசூா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் ஆலம்பட்டிபுதூா், மணப்பாறை வட்டத்தில் புத்தாநத்தம்பட்டி, முசிறி வட்டத்தில் முத்தம்பட்டி, துறையூா் வட்டத்தில் முருகூா், தொட்டியம் வட்டத்தில் கீழ சீனிவாசநல்லூா், மருங்காபுரி வட்டத்தில் லெக்கனாக்கம்பட்டி, லால்குடி வட்டத்தில் தாளக்குடி-2, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் திருவாசி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

 

அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என கூறியுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.