பெங்களூரில் நடந்த 4 வது அகில இந்திய தடகள போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் திருச்சியை சேர்ந்த கோகுல்நாத் கோல் ஊன்றி (pole Vaulte) தாண்டும் பிரிவில் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பல வீரர்கள் கலந்து கொண்ட தடியூன்றித் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டாலும் திருச்சியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் கோகுல்நாத் இப்போட்டியில் பங்குபெற்ற அபாரமாக தடையை தாண்டி தங்கம் வென்றார் .
தங்கம் வென்ற கோகுல்நாதை அவரது நண்பர்கள் , உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தங்கம் வென்ற கோகுல்நாத் கூறுகையில் எனக்கு தகுந்த ஸ்பான்சர் கிடைத்தால் சர்வதேச அளவிலும் தன்னால் பதக்கங்கள் வெல்ல முடியும் என கூறியுள்ளார் .