பொன்மலை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாளை திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போராட்டம்.
மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம். இந்திய மாணவர் சங்கம் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு .
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10/ 11/ 2025 மதியம் செய்தி ஊடகத்தில் வீடியோ வெளியானது. அதனை தொடர்ந்து பள்ளியின் தாளாளரை சந்திக்க பொன்மலை காவல்துறையினர் பள்ளிக்கு சென்றனர் ஆனால் அப்போது பள்ளியில் தாளாளர் ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் இல்லை என கூறப்படுகிறது. அதற்குப் பிறகு காவல்துறையினர் தாளாளரை பள்ளிக்கு வெளியில் சந்தித்துள்ளனர். 11/03/2025 காலை 7.15 மணிக்கு பள்ளி தாளாளர் தாக்கிய மாணவனையும் அவருடைய வீட்டையும் அடையாளம் கண்ட காவல்துறை காவல் உதவி ஆய்வாளர் எஸ் ஐ வினோத் உத்தரவின் பேரில் இரண்டு காவலர்கள் சீருடையுடன் பள்ளி மாணவன் வீட்டுக்கு சென்று பள்ளி மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துப் போவதாக தெரிவித்தனர். அதற்கு மாணவனின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார் அதனையும் பொறுப்பெடுத்தாமல் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அழைத்து வர சொன்னதாக சொல்லி பள்ளி மாணவனை கட்டாயப்படுத்தி காவல்துறையினரின் வாகனத்தில் அமர வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குற்றவாளியை போல உட்கார வைத்திருந்தனர். அதன் பிறகு மாணவனின் பெற்றோர் இந்திய மாணவர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு உடனடியாக விரைந்து பள்ளி மாணவனின் தந்தையை சந்தித்து அவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று இந்திய மாணவர் சங்கத்தினர் காவல் துறையோடு வாதாடி பள்ளி மாணவனை மீட்டனர். உடனடியாக காவல்துறையின் இந்த அராஜக போக்கை கண்டித்து காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். உடனடியாக காவல் ஆய்வாளரின் வாகனம் வர பாதிக்கப்பட்ட மாணவன் பிரியங்கா காந்தி அவருடைய தந்தை மற்றும் உடன் வந்த சிலர் காவல் நிலையத்திற்குள் நின்று கொண்டிருந்தனர் அப்போது காவல் ஆய்வாளர் பிரியங்கா காந்தியை பார்த்து உனக்கு என்ன வேலை நீ படிக்கக்கூடிய பையன் வெளியே போ என்றார் அதற்கு அய்யா இந்த மாணவனை தான் காலை 7:45 மணிக்கு பெற்றோரின் அனுமதி இல்லாமல் உங்கள் காவல்துறையினர் குற்றவாளியை போல காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர் எனக் கூறியவுடன் உடனடியாக காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளரை அறைக்கு அழைத்து காவல் ஆய்வாளர் எஸ் ஐ வினோத்திடம் என்னவென்று விசாரித்தார் அப்போது காவல் உதவி ஆய்வாளர் வினோத் நான் தான் பள்ளி மாணவனை அழைத்து வர ரோந்து காவலர்களை வீட்டிற்கு அனுப்பியதாக கூறினார் .அதன் பிறகு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் தாளாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவனின் தந்தை பரமசிவம் புகார் கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் மறுநாள் மனு ரசீது போட்டுக் கொடுத்தார். 12/03/2025 அன்று இந்திய மாணவர் சங்கத்தினர் தாளாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி திருச்சி காவல் ஆணையர் காமினி அவர்களிடம் புகார் கொடுத்தனர். அதேபோல 14/03/2025 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது .

அதே போல 17/03/2025 அன்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களிடம் தாளாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அன்று மாலை விசாரணை நடத்துவதாக கூறி வரச்சொன்னார் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் பாதிக்கப்பட்ட மாணவனும் அவருடைய பெற்றோரும் கட்டாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் எந்த காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் கொடுத்திருந்தோமோ அந்த உதவி ஆய்வாளரிடமே நாங்கள் கொடுத்த மனுவை கொடுத்து விட்டார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்புவதாக சொன்னார்.
18/03/2025 அன்று மாலை பொன்மலை பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரவு 9 மணி வரை போராட்டம் தொடர்ந்து அப்போது விவேகானந்தா நகர் பகுதியில் இருந்து ரயில்வே ஊழியர் ஒருவர் தொடர்பு கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மாணவர்களை சரமாரியாக பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் வினோத் தாக்கியதாக கூறினார் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்தோம். காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் மாணவர் ஒருவர் முகம் வீங்கிய நிலையில் 108 ஆம்புலன்சில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை கண்டித்து வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டோம். லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றது ஆனால் திருச்சி காவல் ஆணையரின் பார்வைக்கோ மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கோ எட்டவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்துவதை பார்த்த எங்களுடைய தோழமை அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 22/03/2025 அன்று மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் வினோத் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து போராட்டத்தில் பேசினார். தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் தன் துடைப்பிற்கு மட்டுமே காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் இதனை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
நாளை திங்கட்கிழமை (24/03/2025) காலை 11 மணிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் சம்சீர் அகமது தலைமையில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.