Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது.

0

'- Advertisement -

தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூா் காவல் உதவி ஆய்வாளா் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

 

Ad banner

தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் திருவிடைமருதூா் காவல் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் க. மணிவண்ணன்.

TVK ad

இவா் திருச்சி விமான நிலையம், திருச்சி மாநகா், மாவட்டம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றியதைப் பாராட்டி, இவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

 

இவரை தஞ்சாவூா் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளா் எஸ். கோபிநாத் மற்றும் காவல்துறை அதிகாரிகள்   எஸ்ஐ மணிவண்ணனை  பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.