Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து வருகின்ற 15 ம் தேதி சென்னையில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தினர் கழுதைகள் காதில் சங்கு ஊதும் போராட்டம் ..

0

'- Advertisement -

Ad banner

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம் நடத்தப்படும் என தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.

 

இதுகுறித்து தற்போது கசிந்துள்ள தகவல் என்னவென்றால் வரும் 15ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் சரியாக காலை 8 மணிக்கு கழுதைகள் காதில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என தெரிய வருகிறது .

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை செயல்படாமல் உள்ளதால் இந்துக்களின் எழுச்சியை காட்டுவதற்காக இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்து திருக்கோயில் மீட்பு இயக்க வழக்கறிஞர்கள் (சட்ட ஆலோசகர்கள்) மற்றும் கர்ப்பிணி பெண்கள் என ஏராளமானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் திருச்சியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்க நடவடிக்கை எடுத்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து திருச்சி காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சி பாலக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்து நான்கு மாதம் ஆகியும் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் யாரையும் இதுவரை காவல் துறை விசாரிக்காததை கண்டித்தும் (ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா என்பதால் இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் எதிரொலிக்குமாம் என தெரியவில்லை)

இந்து திருக்கோயில் மீட்பு இயக்க கோரிக்கைகள்:

1. திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் ₹700 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க!

2. திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலில், கடந்த 36 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க!

3.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் வசம் ஒப்படைக்க!

4.திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் நிலுவையில் உள்ள சுமார் ₹1.5 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வசூலிக்க! மேலும், வாடகையை வசூலிக்கத் தவறிய செயல் அலுவலர் (EO) மீது உரிய நடவடிக்கை எடுக்க!

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.