Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் துப்பாக்கி காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0

'- Advertisement -

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

 

Ad banner

திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (வயது 36), ரௌடி. இவா், கடந்த பிப். 14 ஆம் தேதி கொடியாலம் சீ. சந்திரசேகா் என்பவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஜீயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

 

TVK ad

முன்னதாக, சக்தியிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து இருந்தனர்.

 

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில் சக்திவேலை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை கைது செய்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.