திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
கூட்டாளிகள் தப்பி ஓட்டம்.
திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 52 ).
இவர் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர் அவர் தர மறுத்துள்ளார்,
அதை தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் கான்வென்ட் சாலையை சேர்ந்த அலெக்சாண்டர் சாம்சன் ( வயது 30 ) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.
மேலும் அவருடன் இருந்த இரண்டு கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர் சாம்சன் சரித்திர பதிவேடு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.