திருச்சி காவிரி பாலத்தில்
கார் மோதி
2 வாலிபர்கள் பரிதாப பலி
போக்குவரத்து போலீசார் விசாரணை.
திருவரங்கம் காவிரி பாதத்தில் நள்ளிரவில் கார் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருவரங்கம் கீழ சித்திரை வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன்.இவரது மகன் சாரநாத் (வயது 23). திருவரங்கம் சாத்தார வீதியைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் .இவரது மகன் கோகுல்நாத் (22).இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் திருவரங்கத்தில் இருந்து திருச்சி நோக்கி காவேரி பாலத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர் திசையில் வந்த கார் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சாரநாத்,கோகுல்நாத் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.