Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பழ வியாபாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களுக்கு தர்ம அடி

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் பரபரப்பு சம்பவம்

பழ வியாபாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயற்சி

 

TVK ad

பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு.

 

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி இரண்டு வாலிபர்கள் பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அந்த இரண்டு வாலிபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு பொதுமக்கள் இரண்டு வாலிபர்களையும் பிடித்து கோட்டை காவல் நிலைய போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

 

இதை அடுத்து பிடிபட்ட இரண்டு வாலிபர்களிடம் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வாலிபர்கள் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.