எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நிரல் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
அஇஅதிமுக நிறுவன தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில்
வருகின்ற (17.01.2025) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி அளவில்
திருவெறும்பூர், பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் அமைந்துள்ள இதயதெய்வம், எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி,
திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வார்டுகளில் காலை 9.30 மணியளவிலும்,
பொன்மலை பகுதி கழகத்திற்கு உட்பட்ட வார்டுகளில் காலை 10.00 மணி அளவிலும்.
அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வார்டுகளில் காலை 10:30 மணி அளவிலும்
லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 11.00 மணி அளவிலும்
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மதியம் 12.00 மணி அளவிலும்
எம்ஜிஆரின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படங்களுக்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அது சமயம் சம்பந்தப்பட்ட பகுதிகளை சார்ந்த கழகத்தின் அனைத்து நிலைகள் உள்ள நிர்வாகிகளும், செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று எம்ஜிஆரின் புகழுக்கு மேன்மை செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் புரட்சித்தலைவரின் திருவுருவ படங்களை வைத்து மரியாதை செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.