திருச்சிராப்பள்ளி பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் அமைந்துள்ளது பிஞ்சுராபோல் (கோசாலை) – தமிழில் கோ பரிபாலன ஆசிரமம்.
இந்த ஆசிரமம் இங்கு கடந்த 100 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டு வருகிறது.
மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு முன்னிட்டு பசு மடத்தில் தலைவர் நரேஷ் குமார் அவர்கள் தலைமை தாங்க அறங்காவலர்கள் மனோஜ் குமார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மாட்டுப் பொங்கல் விழா வெகு சிறப்பாக காஜாபேட்டையில் அமைந்துள்ள கோசாலையில் கொண்டாடப்பட்டது.
இங்கு உள்ள கோமாதாவிற்கு குளிப்பாட்டி, வர்ணம் பூசி, குங்குமம், சந்தனமிட்டு மலை அணிவித்து அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக பூஜைகள் செய்து ஜெயின் சமுதாய மக்களால் நேற்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஜெயின் சமுதாய மக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல், பசும்பால் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.