ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் , ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி சிவகாமி. சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் சமூகம் அன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்தவர், காலையில் எழுந்திரிக்கவே இல்லை.. அறை கதவை திறந்த போது தான், கணவன் இருந்த கோலத்தை கண்டு கலங்கி போனார் ….
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37) இவர் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி சிவகாமி (வயது 32). இவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திவ்யஸ்ரீ (10) என்ற மகளும், அஸ்வந்த் (8) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த சசிக்குமார் சாப்பிட்டு அறைக்குள் தூங்க சென்றார்
இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு மேல் ஆகியும் சசிக்குமார் அறை கதவை திறக்கவே இல்லை… இதனால் சந்தேகம் அடைந்த சிவகாமி அறை கதவை திறந்து பார்த்தார். அப்போது உள்ளே மின் விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு சசிக்குமார் தொங்கிக் கொண்டு இருந்தார். அதைப்பார்த்து சிவகாமி அலறினார்.சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சசிக்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சசிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறா?, அல்லது பணிச்சுமையா?, வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.