Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாகனங்களில் யார் அந்த சார்? ஸ்டிக்கர்களை ஓட்டிய திருச்சி மாநகர அதிமுகவினர்.

0

திருச்சியில் யார் அந்த சார்? வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிய மாநகர அதிமுகவினர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரம் எதிரொலி.

மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘யார் அந்த சார்’ என்ற, ‘ஸ்டிக்கர்’ பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார்? என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும், ‘யார் அந்த சார்?’ என்பதை கேட்டு, ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., – ஐ.டி., பிரிவு நிர்வாகிகள், சென்னையில் உள்ள மால்களில், ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் வைத்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., சார்பில், இருசக்கர வாகனங்கள், கார்களில், ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

நேற்று மாலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவகத்தில் வாகனங்களில், ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் தங்கள் வாகனங்களில், இந்த ஸ்டிக்கரை ஒட்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராடுவர் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் யார் அந்த சார் ?என்ற ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டினர்.
இந்த நிகழ்வுக்கு கழக அமைப்புச்செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா,பத்மநாதன்,இலக்கிய அணி பாலாஜி,
,அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஞானசேகர்,ஐ.டி பிரிவு வெங்கட் பிரபு,தொழிற்சங்கம் ராஜேந்திரன்,
பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,ரோஜர் ,ஏர்போர்ட் விஜி ,வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சேது மாதவன், முல்லை சுரேஷ்,முத்து மாரி,சசிகுமார்,கௌசல்யா,வர்த்தகர் அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன்,கிருஷ்ணமூர்த்தி,தர்கா காஜா, நத்தர்ஷா, வாழைக்காய் மண்டி சுரேஷ் ,பாலக்கரை ரவீந்திரன்,சக்திவேல்,உறையூர் சாதிக் அலி, உறந்தை மணிமொழியன், கருமண்டபம் சுரேந்தர், டி.எல் எம். செல்வமணி,
வெல்ல மண்டி கன்னியப்பன், எம்.ஜே.பி. வெஸ்லி, இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார்,
பொன். அகிலாண்டம்,
செல்லப்பன், கண்ணன்,தென்னூர் ஷாஜகான்,
உடையான்பட்டி செல்வம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.