திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.4.15 லட்சம் பணத்தை ஏமாற்றிய 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு .
திருச்சியில்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4, லட்சத்து 15, ஆயிரம் மோசடி
2 பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சியாமளா (வயது 47).இவரிடம் மதுரை திருச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் தாங்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சியாமளாயிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பி சியாமளா தன்னுடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரக்கோரி ரூபாய் 4 லட்சத்து,15, ஆயிரம் பணத்தை அந்த நான்கு பேரை நம்பி அவர்களிடம் கொடுத்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சியாமளா வின் மகனுக்கு வெளிநாட்டில் வேலையும் வாங்கி தரவில்லை, கட்டிய பணத்தை பலமுறை திருப்பி கேட்டும் அவர்கள் திருப்பி தரவில்லை.
இதனைத் தொடர்ந்து சியாமளா கோட்டை குற்ற பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.