Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞர் கைவினை திட்டத்தில் திருமண அலங்கரிப்பாளர்களை இணைக்க கோரிக்கை. திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு .

0

 

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஓம் சக்தி பாலமுருகன் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் மணிவண்ணன், மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன், திருச்சி மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில், தமிழக முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட அலங்கரிப்பாளர் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக் கோரியும், தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் சார்ந்த பல்வேறு கலைத்துறை சேர்ந்த கலைஞர்களுக்கு வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளிடம் இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலை நாட்ட நிவாரணம் வழங்க கோரியும், திருமணம் மற்றும் திருவிழா சார்ந்த தொழில் செய்யும் தொழிலாளர்களின் பொருட்கள் எதிர்பாராத விதமாக தீ விபத்துக்குள்ளானால் தொழிலாளர்களின் வாழ்வாதார காப்பீட்டு நிவாரணம் வழங்க கோரியும், மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் மாலை கட்டும் தொழிலாளர்கள் மட்டும் உள்ளனர், அதேபோல் எங்கள் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் இணைக்கப்பட வேண்டும் எனவும், மாநில அரசு புதிதாக ஏற்பாடு செய்துள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் எங்கள் தொழிலை பலவிதமாக பிரித்து ஒரு சில பிரிவுகள் உள்ளன, அதனை ஒன்றுபடுத்தி திருமண அலங்கரிப்பாளர்கள் அல்லது திருமண மற்றும் திருவிழா சார்ந்த வேலை செய்பவர்கள் என்று ஒரு பிரிவினை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் சிறந்த மேடை அலங்கரிப்பவர்களுக்கான போட்டியில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 20 மேடை அலங்கரிப்பாளர்கள் சிறந்த மேடைகளை அமைத்து காட்சிப்படுத்தி இருந்தனர் . சிறந்த மேடை அமைப்பாளர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 50,000, மூன்றாம் பரிசாக 25,000 வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சின்னப்பன், திருச்சி மாவட்ட செயலாளர் அப்துல் நாசர், பொருளாளர் பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட தலைவர் பரசுராமன், செயலாளர் பிரகாஷ், சிவா, விழுப்புரம் மாவட்ட தலைவர் பிரசன்னா, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.