அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி வீட்டை முற்றுகையிட்டனர்.
திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற பொது மக்களால் பரபரப்பு,
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் தடுத்ததால் வயலூர் சாலையில் சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தினால் காலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிக்கு செல்வோர் சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்தில் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு உள்ளாகினர் .
போராட்டத்தை தடுத்த போலீசாருடன் மக்கள் தள்ளுமுள்ளு கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பொது மக்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்ம்பித்தது.