இந்திய பணத்தாளில் இடம் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் செயலர் குணசேகரன் பொருளாளர் அப்துல் அஜீஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
கண்காட்சியினை பார்வையிட வருகை தந்த பள்ளி மாணவர்களிடம் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி இந்திய பணத்தாளில் இடம் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்து பேசுகையில்,
இந்திய ரிசர்வ் வங்கி 1975-1977 ஆண்டில் 203 × 127 மிமீ அளவில் செவ்வக வடிவில் பணத்தாளின் முன்பக்கம் ஆயிரம் ரூபாய் மதிப்பும் பின்பக்கம் தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அரசால்16 ஜனவரி 1978 பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது என்றார்.