உதயாநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .
தமிழ்நாட்டின் துணை முதல்வராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மாநகர திமுக சார்பாக இன்று கிழக்கு மாநகர செயலாளர்
மு. மதிவாணன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்வை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர் மோகன், ராஜ்முகம்மது, மணிவேல், விஜயகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் மூக்கன் மாநகர நிர்வாகிகள் சந்திரமோகன், நூர்கான் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.