திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி பெண் முதல்வரை தாக்கிய வாலிபர்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மகளிர் கல்லூரி ஹோலி கிராஸ் இக்கல்லூரியில் பல ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியின் முதல்வராக இஷபெலியா ராஜகுமாரி முதல்வராக பொறுப்பில் உள்ளார். இவர் கல்லூரியில் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஒரு மர்ம நபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் மற்றும் கத்தியுடன் அத்துமீறி உள்ளே புகுந்தார்.
பின்னர் நேராக முதல்வர் அறைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார் இதில் கல்லூரி முதல்வருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதல்வரை தாக்கியவர் திருச்சி கிராப்பட்டி நான்காவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த லாலி கிளின்டன் (வயது 40 )என்பது தெரியவந்தது.
இவர் நாமக்கல்லில் இதே ஹோலி கிராஸ் கல்லூரிக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அவரை நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இங்கு வந்து தகராறில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.