திருவரங்கத்தில் திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது .
திருச்சி திருவரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். இவர்கள் ஆடுகள் வளர்த்து, தங்களது வாழ்வாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 13 ந்தேதி இவர்களது ஆடுகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, திமுக கட்சி கொடி கட்டிய 50 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க சொகுசு கார் ஒன்று வந்தது.
அதில் இருந்த மூன்று பேர், கூட்டமாக சென்ற ஆடுகள் பக்கத்தில் ஓரமாக காரை நிறுத்தி, கார் கதவை திறந்து, 3 ஆடுகளை திருடிச் சென்றனர். இந்நிலையில்
சொகுசு காரில் வந்து ஆடுகள் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, மணிகண்டனும், கணேசனும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில்
ஆடுகளை திருடிய கார், பெரம்பலூர் பக்கம் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பெரம்பலூரில் முகாமிட்ட போலீசார், வாலிகண்டபுரத்தை சேர்ந்த மொய்தீன் (வயது 38) என்பவரை பிடித்தனர்.
அவரிடமிருந்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘திருச்சி கலைஞர அறிவாலயம் எதிரே உள்ள கார் வாங்கி விற்பனை செய்யும் மையத்திற்கு சென்ற மொய்தீன்,
விற்பனைக்கு வந்த சொகுசு கார் ஒன்றை, 5 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து விட்டு, காரை எடுத்துள்ளார்.
பிறகு பெரம்பலூர் செல்லும் வழியில் திருவரங்கத்தில் ஆடுகளை திருடிவிட்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, மொய்தீன் மற்றும் காரை விற்பனை செய்த நபர் என மூன்று பேரை கைது செய்து திருவரங்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆடு திருடிய பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்து, திருவரங்கம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.