திருச்சி முன்னாள் எம்.பி எல்.அடைக்கலராஜ் சிலைக்கு தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரசார் மாலை மரியாதை
திருச்சி முன்னாள் எம்.பி எல்.அடைக்கலராஜ் சிலைக்கு தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரசார் மாலை மரியாதை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கலராஜின் 12 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜென்னி ப்ளாசா வளாகத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ், மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் சரவணன், ஜி.கே.முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன், கள்ளிக்குடி சுந்தரம், முன்னாள் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் இப்ராஹிம்,மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஹேமா. முல்லை ராஜன்,முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிக்கல் சண்முகம், மெய்யநாதன், புத்தூர்சார்லஸ், வில்ஸ் முத்துக்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.பி.சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன்,முன்னாள் கோட்டத் தலைவர்கள் ரவி, மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் ,ஜோசப் ஜெரால்டு, ஓவியர்கஸ்பர், செல்வகுமார், காட்டூர் ஆனந்தராஜ், வக்கீல் பிரிவு ஏ.பி.பிரபு, எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் அல்லூர் பிரேம், ராஜ்மோகன்,மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.எம்.ஜி மகேந்திரன், செய்தி தொடர்பாளர் சிவா,உறந்தை செல்வம், பீமநகர் காசிம், அண்ணாசிலை விக்டர், சேவா தளம் அப்துல்குத்தூஸ், கலைச்செல்வி, அமிர்தவல்லி, ஹெலன், சரோஜாதேவி, ரோஸி , ஆனந்த் பிரவீன், ஜெயபால், டெல்லி சரவணன், ஆனந்த பத்மநாபன், காமராஜ் ராஜீவ் காந்தி, சுக்ருதீன் ஜிம் விக்கி கம்பை பாரத் குழுமணி சுரேஷ் ஜாக்கிசான் மைக்கேல் மேகா முகமது இஸ்ஷாம் உறையூர் இர்பான் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மாவட்ட செயலாளர் ஜி.எம்.ஜி. மகேந்திரன், உறங்கை செல்வம், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் மகாலிங்கம், சிந்தாமணி சேது உள்ளிட்டோர் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.