Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆற்காடு நவாப் காசுகள் நூல் அறிமுக விழா. பணத்தாள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது .

0

 

ஆற்காடு நவாப் காசுகள் நூல்
அறிமுக விழா.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சியில் ஆற்காடு நவாப் காசுகள் நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், ஹாபிஸ் அறக்கட்டளை மதன், சென்னை காயின் கிளப் சென்னை மணிகண்டன், அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்பராமன் கண்காட்சியினை திறந்து வைத்து காசு இயல் ஆய்வு மைய இயக்குனர் ஆறுமுக சீதாராமன் எழுதிய ஆற்காடு நவாப் காசுகள் நூலினை அறிமுகப்படுத்தினார்.

விழாவில் நாணயங்கள் சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.