தந்தை பெரியார் 146 வது பிறந்த நாள் சமூக நீதி நாளக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக கொண்டப்பட்டது.
தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்.
பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி” நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவரின் அறிவித்தற்கிணங்க மறைந்த பெரியரின் பிறந்தநாள் ஆன 17.09.24 இன்று மாநகர செயலாளரும் மண்டல தலைவருமான மு.மதிவாணன் தலைமையில்
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், மாநில அணி நிர்வாகிகள் கவிஞர் சல்மா, செந்தில், முன்னிலையில் திருச்சி மாநகர கழகத்துக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து “சமூக நீதி நாள் உறுதி மொழியை” ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், விஜயகுமார், சிவகுக்மார் மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா மற்றும் மாநில, மாவட்ட,மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி,ஒன்றிய,நகர, பேரூர்,வட்ட, வார்டு,கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட,தொகுதி அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக தொன்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்