திருச்சியில் ஜெனிவா மாநாட்டு 75வது ஆண்டை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள். 22 கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு .
திருச்சிராப்பள்ளி மாவட்ட ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பாக ஜெனிவா மாநாட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ் ஆங்கிலத்தில் பேச்சு போட்டி, தமிழ் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப்போட்டி, விழிப்புணர்வு குழு போட்டி கள் நடத்தப்பட்டன.
இதில் திருச்சி மாவட்டத்திலிருந்து 22 கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரெட் கிராஸ் திருச்சி மாவட்டத் தலைவர் இன்ஜினியர் ஜி. ராஜசேகரன், திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேரா முனைவர் இரா. குணசேகரன். திருச்சி மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ஜாபர் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்திரா கணேசன் கல்வி குழுமத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.