திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு முன்னாள் பெண் கவர்னரை அவளிடம் கேள் என ஒருமையில் பேசிய பரபரப்பு வீடியோ.
திருச்சியில் கடந்த சில நாட்களாக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி வாரியாக மற்றும் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது .
இதில் திமுக தலைமை செயலாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி வருகிறார் .
இவ்வாறு நடைபெற்று வரும் கூட்டத்தின் முடிவில் சில நேரங்களில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் .
அப்போது விஜயின் மாநாட்டிற்கு திமுக அனுமதி வழங்க தயங்குவது ஏன் என பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பாண்டிச்சேரி கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளதை பற்றி கேட்டதற்கு அதற்கு அவர் அவளிடம் கேள் என கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது .