திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி தெற்கு மாவட்டம்
கிழக்கு மாநகரம் திருவெறும்பூர் பகுதியில் திமுக 2-வது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவெறும்பூர் பஸ் ஸ்டாப் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு அவைத்தலைவர்
பழனியப்பன் தலைமை தாங்கினார்.
பகுதி செயலாளர்
சிவக்குமார் வரவேற்றார்.
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்,
மாநில இலக்கிய அணி புரவலர்
செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில்
பகுதி துணைச் செயலாளர்
துரைராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் ,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என மாபெரும் வெற்றி கண்ட தமிழக முதல்வருக்கு இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது,
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை 111 விழாவாக நடத்தி காட்டிய மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவாழ்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் ஆகியவை திருச்சி தெற்கு மாவட்டத்தில் நிறுவியதற்காக தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழர் இளைஞர் விளையாட்டு நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பது,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான பொய்யாமொழி அறிவித்ததை போல விளையாட்டு துறை அமைச்சர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன்,
லீலாவேலு, நூர்கான், சந்திரமேகன், தமிழ்செல்வன், பொன்செல்லையா.
பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.