திருச்சி மாநகரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிகவினர் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கியும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடினர்.
காலை விமான நிலையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு ஏர்போர்ட் பகுதி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின், மலைக்கோட்டை , பாலக்கரை , ஜங்ஷன் , பொன்மலை , அரியமங்கலம் பகுதி , துவாக்குடி நகரம் , சூரியூர் ஒன்றியம் உள்ளிட்ட இடங்களில் கழக கொடி ஏற்றிய ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கியும் சிறுவர்களுக்கு நோட்டு பென்சிலும் வழங்கப்பட்டது.
இதில் மாநில இணையதள அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் , அவைத் தலைவர் ஜெயராமன் , பொருளாளர் மில்டன் குமார் , மாவட்ட துணைசெயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன் , ராஜ்குமார் , விஜய சுரேஷ் , பெருமாள் , அய்யப்பன் , லோகராஜ் , பாண்டியன் , தமிழ் , பகுதி செயலாளர்கள் வெங்கடேசன் , சங்கர், குமார் , அலெக்சாண்டர், அருள்ராஜ் , மணிகண்டன், மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் , மகளிர் அணி இந்துமதி, பிரியா , கிருபா , நிஷா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் ஊராட்சி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.