எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திமுக எங்கே தமிழை வளர்த்திருக்கிறது. திருச்சியில் சீமான் பேட்டி .
சட்டமன்றத் தேர்தலில்
நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும்
திருச்சியில் சீமான் பேட்டி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் மாற்றுக் கட்சிகளுக்கு செல்கிறார்கள்.
தமிழ் கடவுள் முருகனை இப்போதுதான் ஆளுங்கட்சியினருக்கு தெரிகிறது இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குடமுழுக்கு, பாராயணம் என்ற வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
அன்னதானமும் 2 லட்சம் பேருக்கு பஞ்சாமிர்தமும் கொடுத்தேன் என்று சொல்வதால் மட்டும் முருகனின் பெருமையை சொல்லிவிட முடியுமா.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றிய திமுக அரசால் அதை செயல்படுத்த முடிந்ததா?
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திமுக எங்கே தமிழை வளர்த்திருக்கிறது.
அவர்கள் வந்த பிறகு என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தொடர்பான கேள்விக்கு,
எங்கள் அப்பன் ஆத்தா மனைவி குழந்தைகளுக்கும் மானம் இருக்கிறது நாங்கள் ஒன்றும் ஈனப்பிறவி கிடையாது. அவரவர் வேலையை பார்த்தால் சரியாக இருக்கும் .
சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதுவரை 50,60 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டோம். 117 தொகுதிகளில் ஆண்களையும்,117 தொகுதிகளில் பெண்களையும்வேட்பாளர்களாகதேர்ந்தெடுக்க உள்ளோம்.தம்பி விஜயுடன் கூட்டணி சேர்வது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கு. 2025 க்கு பிறகு பேச முடியும். விஜய் எங்களுடன் கூட்டணி வைப்பது காலம் தான் பதில் சொல்லும் .எங்களுக்கு என்று தனி கொள்கை இருக்கிறது.அந்த கொள்கையை யார் மதிக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்று வோம் இவ்வாறு சீமான் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .