சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி பெர்ல் அறக்கட்டளை மற்றும் குழந்தை இயேசு மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .
திருச்சி, மேலப்புதூர், கண்டோன்மென்ட் ரோடு, செயிண்ட் ஆன்ஸ் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் PEARL (கிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை) TRUST கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமான சமுதாயத்தை மேம்படுத்தும் பல பணிகளை செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 78-வது சுதந்திர தினத்தையொட்டி பெர்ல் அறக்கட்டளையும், திருச்சி, குழந்தை இயேசு மருத்துவமனையும், இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் குழந்தை இயேசு மருத்துவமனையின் நிர்வாகியான Rev. Sr. ஆலிஸ் டி குன்ஹா தலைமையில், பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர் & மேலாண்மை அறங்காவலரும், வழக்கறிஞருமான டாக்டர்.ரெ.இராமச்சந்திரன் முன்னிலையில், Rev.Sr.Dr.விஜிலா பால்ராஜ் குழந்தை நல மருத்துவர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர், Rev.Sr.Dr.ஆஞ்சலின் பவுலின், பொது அறுவை சிகிச்சை மருத்துவர், டாக்டர்.நவீன், மற்றும் டாக்டர்.அசீலா உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள், 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்ட முகாமை டாக்டர்.ஷீலாதேவி, கருணை கண்கள் முதியோர் இல்ல நிர்வாகி லெட்சுமி, பிரவீனா மற்றும் பயிற்சி வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தும், பெர்ல் அறக்கட்டளை மற்றும் கருணை கண்கள் முதியோர் இல்லம் சார்பாக சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தும், பல்வேறு துறை மருத்துவர்களும் இணைந்து தேசிய கொடிக்கு மரியாதை செய்து சுதந்திரதினத்தையொட்டி மாபெரும் இலவச மருத்துவ முகாம் (அனைத்து வயதினருக்கும்) நடத்தப்பட்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி இலவச மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்கை, இலவச மருந்துகள் பெற்றுக்கொண்டு பயனடைந்தனர்.
மேற்படி இலவச மருத்துவ முகாமானது மாத்தூர் ரவுண்டான அருகில் உள்ள ‘கருணை கண்கள்” முதியோர் இல்லத்தின் வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.