திருச்சியில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மலைக்கோட்டை பகுதி சார்பில் துண்டு பிரசுரம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது . சிறப்பு அழைப்பாளராக ரத்னவேல் பங்கேற்பு .
அஇஅதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க ,
திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில்
விடியா திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் அண்ணன் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ரத்தினவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .
மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் இந்தநிகழ்வு நடைபெற்றது.
மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் அருகில் தொடங்கி வானப்பட்டறை கோயில் வரை உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.