மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்க பாடுபடுவோம் என சபதம் ஏற்போம்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க
இன்று காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் -1

எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள், அனைத்து வார்டுகளுக்கு கழக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று கழக உறுப்பினர் அட்டையை உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் -2
வருகின்ற 2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி மீண்டும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அமைத்திட அனைவரும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம்.
இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் , பொன்.செல்வராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.