திருச்சியில் 22,23ஆம் தேதிகளில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு .
அஇஅதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான
எடப்பாடி ஆணைக்கிணங்க
வருகின்ற 22.07.2024 அன்று விடியா திமுக அரசை கண்டித்து அல்லித்துறையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் 23.07.2024 அன்று தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களை திரளாக கலந்து கொண்டு எழுச்சியுடன் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது . திரளானோர் பங்கேற்று நமது எதிர்ப்பை காட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார் .
இந்த நிகழ்வில்
தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.