திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் திமுக அரசை கண்டித்து நடைபெறும் கண்டனம் ஆர்ப்பாட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தலைமையில் இன்று வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் , மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர்,கழகப் செயலாளர்கள் , சார்பு அணி செயலாளர் திரளானோர் கலந்து கொண்டனர் .
மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .
தீர்மானம் -1
ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டு, ஏழை எளிய மக்களை வேதனைக்கு ஆளாக்கத் துடிக்கும் விடியா தி.மு.க. அரசைக் கண்டித்தும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பாக கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, கழக அமைப்புச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், ஆகியோரின் தலைமையில் வருகின்ற 22.07.2024 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அல்லித்துறை கிராமம் அண்ணா திடலில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராளக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2.
தமிழகத்தில் 3 வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா தி.மு.க.அரசை கண்டித்து மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வி.பி.பரமசிவம் தலைமையில் வருகின்ற 23.07.2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில் சமயபுரம் நால்ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராளக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.