Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை கல்வித்துறை அலுவலகத்தை 3 நாட்கள் முற்றுகையிடும் போராட்டம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உயர்மட்டகுழு கூட்டத்தில் முடிவு .

0

'- Advertisement -

 

தொடக்க கல்வி ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி

சென்னைமில் வருகிற 3 நாட்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் முடிவு.

Suresh

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குமு உயர்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மயில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிரச்சினையில் 243 அரசானையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வுதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வுவை பறிக்கும் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி வருகிற 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் சென்னையில்
கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறோம். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் ஆயுத்த கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள்
வின்சென்ட் பால்ராஜ், தாஸ் ,முத்துராமசாமி.சண்முகநாதன், அண்ணாதுரை,
திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
நீலகண்டன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.