Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென்னிந்திய யாதவ மகா சபை சார்பில் அழகு முத்துகோனின் 267 வது குருபூஜை விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது .

0

'- Advertisement -

 

திருச்சி தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் தென்னிந்திய யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோனின் 267 ம் ஆண்டு குருபூஜை விழா தென்னிந்திய மகாசபை மாநிலத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் முத்துக்குமார் (எ) வேலு யாதவ் வரவேற்புரை ஆற்றினார் .

மண்ணை அரங்கநாதன், கவுன்சிலர் மண்டி சேகர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

Suresh

இந்நிகழ்ச்சியில் பாரத முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பாரத ராஜா யாதவ், குணசேகரன், ஸ்ரீதர், திருவேங்கடம் யாதவ் , சிவாஜி சண்முகம், ராமலிங்கம் யாதவ் , ராமலிங்கம், இளவரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் .

யாதவ மகாசபை மாநில தலைவர் தமிழ்ச்செல்வம் , திருச்சி மாவட்ட தலைவர் தங்கராஜ் , தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில செயலாளர் ஸ்ரீதர் யாதவ் , திமுக பகுதி செயலாளர் முகேஷ் யாதவ் , வீரா யாதவ் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

தென்னிந்திய யாதவ மகா சபை மாவட்ட பொருளாளர் கோபிநாத் யாதவ் நன்றி உரை ஆற்றினார் .

முன்னதாக வீரன் அழகு முத்துக்கோன் திரு உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.