சென்னை மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுவனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனை பரிசோதித்தபோது எச்.ஐ.வி.பாசிட்டிவ் என அறிக்கை அளிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர வேறு இடத்தில் சென்ரு பரிசோதனை மேற்கொண்டனர் . அதில் எச்.ஐ.வி. நெகட்டிவ் என வந்தது.

இதையடுத்து பரிசோதனை மையம் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதாக நடிகரும் வழக்கறிஞருமான கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுவனுக்கு எச்.ஐ.வி.பாசிட்டிவ் என்பதை உறுதி செய்ய சோதனை நடத்தி பணம் பறிப்பதற்காக தவறான அறிக்கையை கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவாகரத்து குறித்து விளக்கம் அளித்துள்ள தனியார் பரிசோதனை மையம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறுவனின் அறிக்கை தவறாக வந்துள்ளதாகவும், தற்போது சிறுவனின் பெற்றோர் எங்களுடன் சமரசம் ஆகி விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.