கள்ள சாராய விவகாரம் . திறனற்ற திமுக அரசே காரணம் எனக் கூறி திருச்சியில் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் .100க்கும் மேற்பட்டோர் கைது.
கள்ளச்சாராயம் சம்பவம்:திமுக அரசை கண்டித்து
திருச்சியில் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
100 பேர் கைது.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவத்தில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகம் தான் காரணம் என்று கூறி
கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து திருச்சியில் காந்தி மார்க்கெட் வளைவு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருச்சி மாநகர மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இது தொடர்பாக பாஜகவினருக்குகாந்தி மார்க்கெட் போலீசார் தகவல் தெரிவித்தும் தடையை மீறி இன்று பாஜகவினர் திட்டமிட்டபடி ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் வளைவுப்குதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தன. மேலும் அந்த பகுதியில் காந்தி மார்க்கெட் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து
இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால்
சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்தது இருந்தனர்.இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள்
ஒண்டி முத்து, காளீஸ்வரன், செல்வராஜ்,முன்னாள் மாவட்ட தலைவர் லோகிதாஸ்,மணிமொழி தங்கராஜ்,லீமா சிவக்குமார்,ஜெயந்தி ஊடகப்பிரிவு
துணைத் தலைவர் சிவகுமார்,மல்லி செல்வம்,ராஜேஷ் சதீஷ் கார்த்திக், சந்தோஷ் மற்றும்நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மார்க்கெட் பகுதியில் இருந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டு வந்தனர் அப்பொழுது பாஜக நிர்வாகி ஒருவர் தலையில் பானையை வைத்திருந்தார். அந்தப் பானையில்
கள்ளச்சாராயம் ஒழிக என்று எழுதப்பட்டு இருந்தது இந்நிலையில் போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர்..இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் போலீசார் கூறினார்கள். அப்பொழுது பாஜக நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் தடுக்காதீர்கள் என்று கூறினர்.
இதனால் போலீசாருக்கும், பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் போலீசார் பாஜக நிர்வாகிகளிடம் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தீர்கள் மீறி செய்தால் அனைவரையும் கைது செய்வோம் என்று கூறினார்கள்.
ஆனால் பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.இதை அடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது செய்தனர். பிறகு அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்ட சம்பவம் காந்தி மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.