
உறையூரில்
லாட்டரி டிக்கெட் விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது.பணம் ,செல்போன் பறிமுதல்.
திருச்சி உறையூர் பகுதிகளில் லாட்டரி டிக்கெட் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் வினோத் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கே நவாப் தோட்டம் நெசவாளர் காலனி இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 65) என்ற முதியவர் நெசவாளர் காலனி பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துதிருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இதே போன்று கோட்டை பகுதியில் வள்ளுவர் நகர் மதுரை ரோடு சந்திப்பு அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது இலியாஸ் என்ற வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.