Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் கருவேல செடிகளை அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது

0

 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது,

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்மலையடிவாரம் பகுதியில் புங்கை, கொடுக்காய் ப்புளி, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.

தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும், மண்வளமும் பாதுகாக்கப்படும்.
என்பதால் ரோடு ஓரங்களில் முளைத்த சீமைகருவமுள் கன்றுகளை அகற்றும் பணியும் நடந்தது.

இதில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம், “மரம்” பாலகிருஷ்ணன், பொன்மலைப்பட்டி அன்புதாசன், மக்கள் சக்தி இயக்க சார்ந்த தாமோதரன், வெங்கடேஷ், மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டார்கள்.

2024 உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு’ என்பதாகும். ஆங்கிலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘Land Restoration, Desertification and Drought Resilience’ ஆகும்

“எங்கள் நிலம், நமது எதிர்காலம்” என்பதாகும்
நாம் அனைவரும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை அறிந்து, வரும் தலைமுறைக்கு நமது பூமியைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

Leave A Reply

Your email address will not be published.