திருச்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையான பைகள் வழங்கும் நிகழ்ச்சி .
திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் முழக்கத்துடன் மரங்களை வளர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பையை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி மக்கும் வகையிலான பைகள் மற்றும் பழ வகையிலான மர கன்றுகள் வழங்கி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேசிய தடகள விளையாட்டு வீரரும் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தின் மேற்பாற்வையாளருமான தமிழரசன், காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நிர்வாகியும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான முனியாண்டி, தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவர் சிவசங்கர் சேகரன் ஒயிட் ரோஸ் பொது நல அமைப்பின் தலைவர் முனைவர் சங்கர், வழக்கறிஞர் ஆர். நாகலட்சுமி, சமூக செயற்பாட்டாளர் ராபி ஆர்ம்ஸ்ட்ராங் மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயிற்ச்சியாளருமான சுரேஷ் பாபு, மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணைச் செயலாளர் அல்லிகொடி,
தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய டேக்வாண்டோ விளையாட்டு வீரரும் பயிற்ச்சியாளருமான மேத்யூ, தேசிய தடகள விளையாட்டு வீரர் ஷேக்மொய்தீன், சத்தியகலா, பேபிபானு, மங்கயர்கரசி, அருள் செல்வி, சத்தியபிரபா, மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.