Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் சார்பில் வெற்றிகரமாக இரண்டாம் வாரமாக நடைபெற்று வரும் நீர் மோர் பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்தி சிறப்பித்த ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் எதிரில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பில் அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான மே 4ம் தேதி முதல் நீர் மோர் பந்தல் தொடங்கி பொதுமக்களின் தாகம் தீர்த்து வரப்படுகிறது.

TVK ad

நேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம் தொடக்க நாளை முன்னிட்டு அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கலந்துகொண்டு வாழ்த்தி சிறப்பித்து பொதுமக்களுக்கு நீர் மோர் ஊற்றினார் .

வட்ட செயலாளர் ஒத்தக்கடை மகேந்திரன் , திருச்சி மாவட்ட ஜே பேரவை துணை செயலாளர் ஒத்தக்கடை மணிகண்டன், வட்ட செயலாளர் ஜெயக்குமார் , நிர்வாகிகள் மோகன், ராஜ் மோகன் , கல்யாணசுந்தரம், ஏ.புதூர் வசந்த் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.