Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரெக்ஸ் மாவட்ட தலைவர் ஆன பின் தேய்ந்து வரும் திருச்சி காங்கிரஸ் . நாட்டின் பிரதமரை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 பெண்கள் பங்கேற்பு

0

 

திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

வெறும் 8 காங்கிரஸ் மகளிர்கள் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்பு .

ராஜஸ்தான் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி அறுக்கப்படும் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர காங்கிரஸ் தலைவராக ரெக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே தொடக்கம் முதல் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளை தூக்கிவிட்டு புதியதாக கட்சிக்கு வந்தவர்களையும் மாற்று கட்சியில் வந்தவர்களின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர் . இதனால் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் மீது உண்மையான காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர் .

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி அறுக்கப்படும் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அருணாச்சல மன்றத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவி சீலா ஷெலஸ் தலைமையில் எட்டு பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலை பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மீனவர் அணி மாவட்ட தலைவர் வக்கீல் தனபால், மாவட்ட செயலாளர் எழிலரசன்
மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவி மாரீஸ்வரி, மீனவரணி செல்வகுமார் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர் .

இதில் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மகளிர் அணியினர் தாலி கயிற்றுடன் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனை கண்ட பொதுமக்கள் நாட்டின் பிரதமர் கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் பத்து பெண்கள் கூட பங்கேற்கவில்லை இது தேவையா என நகைத்தவாறு சென்றனர் .

தொடர்ந்து திருச்சி மாவட்ட தலைவராக ரெக்ஸ் நீடித்தால் இன்று 18 பேர் நாளை எட்டு பேர் பின்பு திருச்சியில் காங்கிரசில் யாரும் இருக்க மாட்டார்கள் .

Leave A Reply

Your email address will not be published.