திருச்சி புத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 44)என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார்.
நாகராஜன் ஏற்கெனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பிரபல வியாபாரி ஆவார். .இவர் மீது உறையூர் மற்றும் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது
இந்நிலையில் செந்தில் தனக்கு வேலை எதுவும் சரியாக கிடைக்கவில்லை என்று நாகராஜன் யிடம் புலம்பி உள்ளார் அதற்கு நாகராஜன் கவலைப்படாதீர்கள்.நான் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்கிறேன் அதனை வாங்குங்கள் அதில் உங்களுக்கு பணம் பரிசுத்தொகை கிடைக்கும். அதனை வைத்து வியாபாரம் செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிதாக தெரிகிறது.
இதனை நம்பிய செந்தில் நாகராஜனிடமிருந்து லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார்.அந்த லாட்டரி சீட்டில் செந்திலுக்கு பரிசு தொகை கிடைத்து உள்ளது. அந்த பரிசுத்தொகையை நாகராஜனிடம் செந்தில் கேட்டபோது நாகராஜன் அதனை தர மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செந்தில் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நாகராஜன் திருச்சி வயலூர் சாலையில் திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.