Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புங்கனூர் கிராமத்து ஏழு சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் . புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் சார்பில் மாபெரும் அன்னதானம் .

0

 

திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர், ஸ்ரீ பாலசுப் பிரமணியர், ஸ்ரீ வாடிவாசல் கருப்பு, ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ மகாகாளியம்மன், ஸ்ரீ மதுர காளியம்மன் மற்றும் ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் ஆகிய 7 கோயில்களின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

கடந்த 17ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பல் வேறு பூஜைகள் நடந்தன.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 7 கோயில்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து விழாவில் அதிமுக புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது .


மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் கருப்பையா ஊராட்சி தலைவர்கள் சுந்தரம், தாமோதரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

விழா ஏற்பாடு களை பட்டையதாரர் நந்தகுமார். கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.