Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்.

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தில் தங்கு தடை இன்றி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழங்குவதை கண்டித்து அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்டம் கருமண்டபம் பகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி. ரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பத்மநாபன், பகுதி செயலாளர் கலைவாணன் ,
வட்டச் செயலாளர்கள் சிங்காரவேலன், வசந்தம் செல்வமணி, கேசிபி. ஆனந்த், கமல்ஹாசன், அமீர் பாஷா ,சரவணன், சின்னப்பன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தேன்மொழி, மீனவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் துரைசாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

 

 

அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேசுவையில் தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது . கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடலை மிட்டாய் போன்று எளிதாக கிடைக்கிறது . டாஸ்மார்க் பாகங்களில் 24 மணி நேரமும் மது விற்பனையாகிறது . மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பாலாய் போக இந்த விடியா திமுக அரசு காரணமாக உள்ளது .

 

தமிழகத்தில் திமுக சாதிக் பாஷா போன்ற நிர்வாகிகளே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இதுபோன்று தமிழகத்தில் எளிதாக உறங்கி வரும் போதை பழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என கூறினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.