Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசு கண்டித்து திருச்சி அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் மனித சங்கிலி போராட்டம் .

0

'- Advertisement -

 

Ad banner

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 

TVK ad

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சாலையில், மலைவாசல் பகுதியில் துவங்கி பூம்புகார் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், அம்மா பேரவை மாநில துணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன் , அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.